மெக்­ஸிக்கோ எல்லைச் சுவர் ஆணையில் கையெழுத்திட்டார் டிரம்ப்!!!

அமெ­ரிக்­காவின் புதிய ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் கால சர்ச்­சைக்­கு­ரிய வாக்­கு­று­தி­யொன்றை நிறை­வேற்றும் வகையில் மெக்­ஸிக்­கோ­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டையில் சுவ­ரொன்றை எழுப்பப் போவ­தாக சூளு­ரைத்­துள்ளார்.
இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கு உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி தென் பகுதியில் மிகப்பெரிய சுவரை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி அமெரிக்கா - மெக்ஸிக்கோ இடையே 3,200 கிலோமீற்றர் நீளத்திற்கு சுவர் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய டிரம்ப், “எல்லை இல்லா நாடு ஒரு நாடே அல்ல. எல்லை பாதுகாப்பை அமெரிக்கா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages