கூட்டு எதிர்க்கட்சியினால் நுகேகொடையில் நாளை கூட்டமொன்று நடத்தப்பட உள்ள நிலையில், அந்தக் கூட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் அனுராதபுரம் சாலியபுரவில் பிற்பகல் 2.00 மணிக்கு கூட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளது.
கிராமிய பொருளாதார அபிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்க உள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம், கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் ராஜித சேனாரட்ன, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

No comments:
Post a Comment