இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – தென்னாபிரிக்கா வேண்டுகோள்!!!

இஸ்ரேலுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் ஸுமா தனது நாட்டு மக்களிடம் வேண்டியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டுவதற்கு இஸ்ரேல் தடையாக உள்ளதென்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் 105 ஆவது வருட மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே ஸுமா மேற்கண்டவாறு தெரிவித்தார். தலைநகர் ஜொஹான்ஸ்பேர்க்கில் இம்மாநாடு நடந்தது.
சுயநிர்ணய உரிமையை வெல்லும் பாதையில் பலஸ்தீனர்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர். தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் இதைப் போன்ற துயரத்தையே தொடக்கத்தில் எதிர்கொண்டனர் என்றும், இறுதியில் வெற்றியடைந்தனர் என்றும் ஸுமா தனது உரையில் நினைவுகூர்ந்தார்.

No comments:

Post a Comment

Pages