முசலிப் பிரதேச கடல் வளம் பாதுகாக்கப்பட்டு, மீனவர்களுக்கு நீதி கிடைக்குமா? - மீனவர்கள் கோரிக்கை
முசலி மக்களின் கடல் வளத்தை ஏனையவர்களுக்கு தாரைவார்க்காமல், பாதுகாத்துத் தருமாறு கோரி முசலிப் பிரதேச செயலாளரிடமும் ஏனைய அரசியல் பிரமுகர்களிடமும் முசலிப் பிரதேச மீனவர்கள், பொது மக்கள் மகஜரைக் கையளித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
முசலிப் பிரதேச மீனவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வமைதிப் போராட்டம் இன்று புதன்கிழமை (09.11.2016) காலை 9.00 மணிக்கு சிலாபத்துறை பஸ்தரிப்பு நிலையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டப் பேரணி முசலிப் பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. அதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
1990 ஆம் ஆண்டு முசலிப் பிரதேசத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட பின்னர் இப்பிரதேச மீனவர்களின் காணிகள் பலராலும் பயன்படுத்தட்டு வந்துள்ளது. சுமார் 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடங்களில் குடியேறுகின்ற மீனவர்கள் மீன்பிடித் தரிப்பிடங்களின்றித் தவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே கொண்டச்சிப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளில் ஏனையவர்களை குடியமர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்முயற்சியின் மூலம் முஸ்லிம்களின் காணிகளை பறித்து, முஸ்லிம்களை தொழில்ரீதியாக முடக்கப் பார்க்கின்றனர்.
இவ்வாறே ஏற்கனவே, சிலாபத்துறையிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இக்காணி ஆக்கிரமிப்பினால் சிலாபத்துறை மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பிரச்சினைகளை நல்லாட்சி அரசாங்கம் தீர்த்துத் தரும் என்ற நம்பிக்கையிலேயே நாம் இம்மகஜரை கையளிக்கிறோம்.
முசலிப் பிரதேச கடல் வளம் பாதுகாக்கப்பட்டு, மீனவர்களுக்கு நீதி கிடைக்குமா? - மீனவர்கள் கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)






No comments:
Post a Comment