நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மட்டக்களப்பிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இன்று மேற்கொண்டுள்ள குறித்த விஜயத்தில் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் ஞானசாரர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்தனர்.
அங்கு, மங்களராம விகாராதிபதியும் கிழக்கு மாகாண பிரதி பிரதம சங்கநாயக்கருமான அம்பிட்டிய சுமனரத்ண தேரருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
அங்கு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் மதங்களுக்கிடையிலான அமைதியையும் உண்டுபண்ணுதல் தொடர்பாகவே ஞானசாரர் குழுவினர் மட்டக்களப்புக்கு வருகை தந்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment