(ந.ஜெகதீஸ்)
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் சிறப்பு அமைச்சுக்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கிகாரம் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே இவ்விடயத்தில் அலட்டிக்கொள்ள தேவையில்லை.
அத்துடன் கடந்த ஆட்சி காலத்தில் திவிநெகும நிதி மக்கள் தேவைக்காக அன்றி தேர்தல் நிதிக்காகவே பயன்படத்தப்பட்டது எனவும் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்தார்.
பொரளையில் அமைந்துள்ள சிறிசற உயன தொடர்மாடி குடியிருப்பில் இன்று சமூர்த்தி பயனாளிகளின் சிறு கைத்தொழிலினை ஊக்குவிக்குமுகமாக நிதியுதவி வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.