றிப்கான் பதியுதீனால் சிறுக்குளம் கிராமத்திற்கு குடிநீர்த்தாங்கி வழங்கல்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின்  வேண்டுகோளின் பேரில், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களினால் மன்னார் சிலாவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர்த்தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அமைச்சரின் இணைப்புச்செயலாளரான முஜாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும், இந்நிகழ்வில், முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் கிராம மக்கள் போன்றோர் கலந்து சிறப்பித்தார்கள்.
அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னராக சிறுக்குளம் பள்ளிவாயல் நிருவாகம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடனான கிராமத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 





No comments:

Post a Comment

Pages