போதைப்பொருளை மாணவர்களிடையே விற்க புதிய யுக்தி : மாத்தளையில் சம்பவம்!!!
மாத்தளை நகரில் பிரபல பாடசாலை ஒன்றுக்கு அண்மையில் பாபுல் வெற்றிலை, பாபுல் பாக்கு உட்பட சில போதையூட்டும் பொருட்கள் விற்கப்படுகிறன்றன. இவை பற்றி நீண்டகாலம் பேசப்பட்டு வந்தாலும் புதிய யுக்தியாக அண்மைக் காலங்களில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது.
பெண்களது நிர்வாணப் படங்கள் அடங்கிய கடதாசியில் அவற்றை சுற்றிக் கொடுப்பதாகவும் அத்துடன் மாணவர்கள் குறுகிய கால இடைவெளியில் நொருக்குத் தீனிகள் வாங்கும்போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்களது மோகத்தை அதிகரிக்க அல்லது தூண்டுவதற்கு சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக் கும்பல் முயற்சிக்கும் ஒரு யுக்தியாக தாம் இதைக் காண்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment