உதயங்கவை “இன்டர்போல் ஊடாக கைதுசெய்ய நீதிமன்றம் அனுமதி!!!
ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச பொலிஸாரான “இன்டர்போல்” ஊடாக கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இன்டர்போல் பொலிஸாருக்கு இது தொடர்பான சிவப்பு ஆணையை விடுத்து உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவை இன்டர்போலினூடாக கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவு நீதவானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2005-2006ம் ஆண்டு காலப்பகுதியில் மிக் ரக விமானக் கொள்வனவின் போது இடம்பெற்ற மோசடி குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு கைதுசெய்ய வேண்டிய தேவையிருப்பதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை உதயங்க வீரதுங்க ரஷ்யாவிற்கான இலங்கைத்து தூதுவராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment