மொசூலில் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலை இடம்பெறும் – துருக்கி எச்சரிக்கை!!!

மொசூலில் சுன்னி முஸ்லிம்களுக்கு எதிரான இனப் படுகொலை இடம்பெறும் – துருக்கி எச்சரிக்கை



ஐ. எஸ். தீவிரவாதிகளை சாக்கு போக்காக கூறி, மொசூல் நகர் மீது ஈராக் மேற்கொண்டுள்ள மாபெரும் படையெடுப்பு ஷீஆ ஆயுததாரிகள் நகருக்கும் நுழைய வழி செய்து விடும் என துருக்கியின் மூத்த அரசியல் வாதியும், ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சருமான உமர் ஜலீக் எச்சரித்துள்ளார்.
துருக்கி ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த படையெடுப்பின் காரணமாக மொசூலில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயரும் வாய்ப்பு உள்ளமை, துருக்கி மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் மீது மோசமான பதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ. எஸ். ன் காட்டுப்பாட்டில் இருந்து மொசூலை மீட்கும் நோக்கில், அமெரிக்க தலைமையிலான சர்வதேச கூட்டணியின் ஆதரவுடன், ஈராக் அரச படைகள், பொலிஸார், குர்தி போராளிகள், ஈரான் ஆதரவு பெற்ற ஷீஆ ஆயுத குழுக்கள் உள்ளிட்ட 30,000 க்கும் மேற்பட்ட படைகளுடன், மாபெரும் படையெடுப்பை கடந்த திங்கட்கிழமை முதல் ஈராக் மேட்கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

Pages