வெட் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று!!!

வெட் வரி திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இன்று!!!


பெறு­மதி சேர் வரி திருத்­தச்­சட்­ட­மூலம் இன்று(26) புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனையடுத்தே குறித்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்று நிறைவேற்றிக்கொள்ளப்பட உள்ளது.
இந்­நி­லையில் பெறு­மதி சேர் திருத்­தச்­சட்­ட­மூ­லத்­திற்கு எதி­ராக  நான்கு மனுக்கள் உயர்­நீ­தி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.
எனினும் இது ­கு­றித்­தான தீர்ப்பு இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் ‍ஒன்­றி­ணைந்த எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் எதிர்ப்­புக்கு மத்­தியில் பெறு­மதி சேர் திருத்­தச்­சட்­ட­மூலம் இன்று விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
பெறுமதி சேர் வரி (வெட் வரி) விதிப்பானது கடந்த மே மாதம்  2 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது.
எனினும் ஒன்றிணைந்த எதிரணி  நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக தற்காலிகமாக  வரி விதிப்பினை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. அதன்படியே தற்போது திருத்தப்பட்ட சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages