உலக சபாநாயகர்களின் கூட்டத்தொடருக்கு இலங்கை தலைமை!!!
சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரில் நடைபெறும் உலக பாராளுமன்ற சபாநாயகர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள சபாநாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று விசேட கூட்டத்தொடரில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சிரியாவின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது.
சுமார் 170 நாடுகளின் பாராளுமன்ற பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தொடருக்கு இலங்கை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகிப்பது ஒரு விசேட அம்சமாகும்.
அமைச்சர் நிமல் சிறிபால டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், வேலு குமார் ரோஹிணி குமாரி விஜயரத்ன ஆகியோர் சபாநாயகருடன் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment