அரச அதிகாரிகள் மக்களுக்கு தகவல்களை வழங்க விரும்புவதில்லை – ரவூப் ஹக்கீம்!!!

அரச அதிகாரிகள் மக்களுக்கு தகவல்களை வழங்க விரும்புவதில்லை – ரவூப் ஹக்கீம்!!!


அரசாங்க அதிகாரிகள், மக்களுக்கு தகவல்களை வழங்க விரும்புவதில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார்.
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்க பொறிமுறைமை முழுமையாக மாற்றக்கூடிய ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்தர்ப்பமாக இந்த சட்ட மாற்றத்தை கருத முடியும். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக அரசாங்க நடவடிக்கைகளை வெளிப்படை தன்மையுடன் மேற்கொள்ள முடியும். இதன் மூலம் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
வாக்காளர்கள் மற்றும் பிரஜைகள் இந்த சட்டத்தின் மூலம் நன்மை அடைவார்கள் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Pages