இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை இதுவரை 3 விக்கட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை அணி குசால் மெண்டிஸ் இரண்டாவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.
இதேவேளை அசேல குணரத்ன தனது அரைச்சதத்தை பூர்த்திசெய்து 62 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

No comments:
Post a Comment