வீசா காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருந்த குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டிருந்த 9 ரஷ்ய பிரஜைகள் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ரஷ்ய பிரஜைகளை விடுவிக்குமாறு இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த ரஷ்ய பிரஜைகள் இன்று நாடு திரும்பவுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டிருந்த ரஷ்ய பிரஜைகள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment