வவுனியா மத்திய பேரூந்து நிலையம் திறந்துவைப்பு!!!

வவுனியா யாழ்வீதியில் மத்திய பேரூந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் இன்று (17.01.2017) திறந்து வைத்தார்!!!

மத்திய அரசாங்கத்தினால் 195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை மேற்கொள்கின்ற பேரூந்துகளுக்குகிடையிலான தரிப்பிடமே இன்று திறந்துவைக்கப்பட்டது.

இதில் 13 பேரூந்துகள் மாகாணங்களுக்கு இடையிலான சேவையிலும் 21 பேரூந்துகள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடதக்கவகையில் அ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் நாளாந்தம் 100 பேரூந்துகள் வந்துபோகும் வகையில் நவீன முறையில் இந்த பேரூந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது.







இலங்கை போக்குவரத்து அணைக்குழுவின் தலைவர் அபயசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பிரதி போக்குவரத்து அமைச்சர் அபேக்க அபயசிங்க. வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிஷாட் பதியுதீன். பாராளுமன்ற உறுப்பினர்களான சி சிவமோகன். கே.காதர் மஸ்தான்.வடமாகாண ஆளுனர் றெஜினேல்ட் குரே. வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன். வடமாகாணசபை உறுப்பினர்களான ஜீ.ரீ.லிங்கநாதன். ஜெயதிலக்க.  அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார.தனியார் போக்குவரத்து சங்க தலைவர் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்….

No comments:

Post a Comment

Pages