முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம் வேண்டாம்!!!

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­யவேண்­டா­மென பலர் அகில இலங்கை  ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக
தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
முஸ்லிம் விவாக, விவா­கரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­காக 2009 ஆம் ஆண்டு தற்­போது ஓய்வு பெற்­றுள்ள உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழு தனது அறிக்­கையை இம்­மாத இறு­தியில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிடம் கைய­ளிக்க தயா­ரா­க­வுள்ள நிலை­யிலே இக்­கோ­ரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.
இதே­வேளை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம், குர்ஆன் மற்றும் ஹதீஸை முன்­னி­றுத்­தியே தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்ளைச் செய்­வ­தி­லி­ருந்தும் உல­மா­ச­பையை தவிர்த்து கொள்ளும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத­னி­டையே, முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான எவ்­வித திருத்­தங்­க­ளையும் மேற்­கொள்­ள­வேண்­டா­மெ­னவும் திருத்­தங்கள் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­தா­கவே அமை­ய­வேண்டும் எனவும் கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் தனியார் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் தலைவர் முன்னாள் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூ­பிடம் கோரிக்கை விடுத்­துள்­ளது

No comments:

Post a Comment

Pages