கல்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்தலங்குண்டுவ பொலிஸ் சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை ஒன்றுக்காக வீடொன்றை நோக்கி சென்ற தருணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக பலத்த காயமடைந்த இருவரும் கடற்படை அதிகாரிகளால் கல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது கவலைக்கிடமான நிலையில் இருந்த ஒருவர் மேலதிக சிகிச்கைக்காக புத்தளம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:
Post a Comment