மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை


மின்சாரக் கட்டணத்தை 5 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.


மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படின் இலங்கை மின்சார சபை, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.


இலங்கை மின்சார சபை தாம் அடையும் வருமானம் மற்றும் ஏனைய விடயங்களைக் கருத்திற்கொண்டு 6 மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கோரிக்கை விடுக்கின்றது.


அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 5 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மின்சார சபை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது

No comments:

Post a Comment

Pages