நுரைச்சோலை மீது அவதானிப்பு : மூவர் கொண்ட குழு நியமனம்.!!!
நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தின் அண்மைய செயலிழப்பு குறித்து சுயாதீன விசாரணையை மேற்கொள்வதற்காக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அதி உயர் தகமைகள் கொண்ட மூவர் குழுவினை நியமித்துள்ளது.
முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அசிஸ் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், இலங்கை பொறியியலாளர் சங்கக் கல்லூரியின் மின் பொறியியல் பிரிவின் தலைவர் ஆர். ஐ. செனவிரத்ன, மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியல் பீடப் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் இக் குழுவின் உறுப்பினர்களாவர்.
No comments:
Post a Comment