'அகதி' பட்டத்திற்கு கால்நூற்றாண்டு பூர்த்தி!!!

'அகதி' பட்டத்திற்கு  கால்நூற்றாண்டு பூர்த்தி!!!

வடமாகாண முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன் (26 வருடங்கள்) கால்நூற்றாண்டு கடந்துவிட்டது. 1990 ம் ஆண்டு அக்டோபர் 24 ம் திகதி வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்களைப்பற்றி, 2002 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கிளிநொச்சியில் வைத்து முதல்தடவையாக சர்வதேச ஊடகவியலாளர்கள் மத்தியில் மௌனம் கலைந்தார் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்

நவமணி சார்பாக அந்த ஊடகவியலாளர் மாநாட்டில் நான் கலந்துகொண்டு கேட்ட கேள்வியொன்றிற்கே பிரபாகரன் வாய் திறந்தார். ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்ற தினத்திலிருந்து இரண்டு நாட்களின்பின் வருகைதரவுள்ள மு. கா. தலைவர் ஹக்கீமுடன் பேச்சு நடத்தியதன் பிற்பாடு வடக்கு முஸ்லீம்கள் தொடர்பில் அறிக்கை ஒன்று விடப்படும் என அப்போது பிரபாகரனும் அன்டன் பாலசிங்கமும் உறுதியளித்தனர்.
மு. கா. தலைவர் ஹக்கீம் தலைமையில் குறிப்பிடப்பட்ட தினத்தன்று முன்னாள் அமைச்சர் அதாஉல்லா , மர்ஹூம்களான வன்னியை சேர்ந்த நூர்தீன் மஷூர் , செனட்டர் மஷூர் மௌலானா அடங்கலான குழுவினர் பிரபாகரனை சந்தித்து கூட்டறிக்கை ஒன்றினையும் வெளியிட்டனர்.
பிரபாகரன்- ஹக்கீம் கூட்டறிக்கையின்படி "வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்கள்" என்ற சொற்பிரயோகத்திற்கு பதிலாக "இடம்பெயர்ந்தோர்" என்ற சொல் உள்ளீர்க்கப்பட்டு அம்மக்களின் வெளியேற்றம் கொச்சைப்படுத்தப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டது.
இதன்பிற்பாடு கூட்டறிக்கை தொடர்பில் அதிருப்தியடைந்த அப்போது மு. கா. வில் பாராளுமன்ற உறுப்பினராயிருந்த , இன்றைய அ.இ.ம.கா. தலைவர் ரிஷாட் பதியுதீன் ஹக்கீமுடன் இது தொடர்பில் அன்று முரண்பட்டார்.
இவ்வாறான நிலையில் மு. கா. விலிருந்து ரிஷாட் வெளியேறிய அன்றைய நாள்தான் வடக்கு முஸ்லீம்களை பொறுத்தவரையில் சுபீட்சமான நாள் என்பதற்கு இன்றுவரை வன்னி நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அபிவிருத்திப்புரட்சி தக்க சான்றாகும்.
ஆகமொத்தத்தில் மு. கா. விலிருந்து ரிஷாட் வெளியேறியமை என்பது சமூகம்சார்ந்த வெளியேறலாகும்.
(ஏ. எச் . எம் . பூமுதீன்)

No comments:

Post a Comment

Pages