தரவரிசை என்பது ஒரு சிறிய ஊக்கம் மட்டும் தான்!


கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதையடுத்து இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தது. இதன்மூலம் இந்திய அணி நான்காவது முறையாக நம்பர்-1 இடத்திற்கு வந்துள்ளது. முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணி முதலிடத்திற்கு வந்துள்ளது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:- 

நான் ஏற்கனவே சொன்னது போல், தரவரிசை என்பது விளையாடுவதற்காக ஒரு சிறிய ஊக்கம் மட்டும் தான். முதலிடம் பிடிப்பதற்கு இன்னும் எத்தனை புள்ளிகள் தேவையாக இருந்தது என்பது கூட எனக்கு தெரியாது. ஒவ்வொரு போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்றே விளையாடுகிறோம். எங்கு விளையாடுகிறோம் என்பது பிரச்சனை அல்ல. வெற்றி பெறுவது தான் நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages