இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 3000 பேரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
உத்தியோகபூர்வற்ற ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள், உற்பட பல்வேறு பதவிகளில் இருக்கும் ஊழியர்களை இவ்வாறு பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வேலை நீக்கம் தொடர்பில் குறித்த ஊழியர்களுக்கு நேற்று மாலை முதல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் விரைவில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் மின்சார சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன

No comments:
Post a Comment