சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் கொடுப்பனவுகளை நிறுத்துவதற்கோ அல்லது வெட்டி விடுவதற்கோ அரசாங்கத்தினால் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்பட வில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (15) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில சமூர்த்தி மானியங்கள் பெறுபவர்களின் சமூர்த்தி மானியக் கொடுப்பனவு வெட்டிவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பிழையான ஊடக செய்தி அறிக்கை காரணமாக, அது தொடர்பில் பிழையான எண்ணப்பாடுகள் மக்கள் மத்தியில் பரவி வருகின்றது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அமைச்சரவையின் கவனத்திற் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment