முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், எதிர்வரும் மே மாதம் 1ஆம் திகதி, காலி முகத்திடலில், மே தினப் பேரணியை நடத்தவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி,இன்று (05) தெரிவித்தது.
இந்தப் பேரணி, “வடபிம,- கொவிபிம- மவ்பிம சுரக்கின நொனவத்தின அரகலய” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறவுள்ளது என்று, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் எம்.பி தினேஷ் குணவர்தன, ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்தப் பேரணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களது ஐந்து கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட 14 அரசியல் கட்சிகளும் பங்கேற்கும்” என்று அவர் கூறினார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மே தினப் பேரணியில், இதுவே மிகவும் பிரசித்தம் பெற்ற பேரணியாக அமையும் என்றும் இதற்கு, தொழிற் சங்கங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்கவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது, கொம்பனித் தெருவுக்கு அருகிலுள்ள பல பகுதிகளில் இருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மேலும், ஒன்றிணைந்த எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மே தினப் பேரணியை, வழக்கமான மே தினப் பேரணி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று, பொதுமக்களிடம், எம்.பி டலஸ் அலகப்பெரும வேண்டுகோள் விடுத்தார்
. “இந்தப் பேரணியை, அரசாங்கத்துக்கு எதிரான படையாகவே, மக்கள் கருத வேண்டும். இது, அரசாங்கத்தின் பல கொள்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள அனைத்து மக்களும் பங்குபற்றக்கூடிய பேரணியாகும்” என்று அவர் மேலும் கூறினார். இதேவேளை, எதிர்வரும் 7ஆம் திகதி, அரசாங்க மருத்து அதிகாரிகள் சங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைக்கு, ஒன்றிணைந்த எதிரணி, ஆதரவு வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. -
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment