ஓமந்தை முகாமுக்கு அருகில் உள்ள பொதுமக்களின் 18 ஏக்கர் காணிப்பிரச்சினை தொடர்பான நடவடிக்கைகள் வவுனியா அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஓமந்தை முகாம் தொடப்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு இராணுவப் பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
ஓமந்தை முகாமுக்கு அருகாமையிலுள்ள காணிதொடர்பில் பொதுமக்கள் உரிமை கோரினர். இதற்கு இராணுவத்தினரால் தீர்வுகாணமுடியாது என்பதனாலேயே இந்த காணி தொடர்பான நடவடிக்கைகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஓமந்தையிலுள்ள முகாம் அகற்றப்படவில்லை காணி தொடர்பிலேயே தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment