வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக ட்ரம்பின் மருமகன்!!!

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் அதியுயர் பதவியான சிரேஷ்ட ஆலோசகர் பதவியை அவரது மருமகனான ஜெரட் குஷ்னருக்கு வழங்கியுள்ளார். ட்ரம்பின் மகளான இவன்காவின் கணவரான குஷ்னர், நியூயோர்கில் பிரபலமான வர்த்தகராவார். மத்திய கிழக்கின் சமாதானத் தூதுவராகவும் இவர் செயலாற்றவுள்ளார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனது நிர்வாகத்தில் இதுபோன்றவர்கள் அங்கம் வகிப்பது எனக்குப் பெருமையளிக்கின்றது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரம்புக்கு நெருக்கமானவர்களை முக்கியமான பதவி களுக்கு நியமித்து வரும் அவர், அமெரிக்காவின் பாரம்பரிய அரசியல் கலாசாரத்திலிருந்து விலகிச் செல்கிறார் என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். ட்ரம்ப் ஒரு குடும்ப நிர்வாகத்தை உருவாக்கப் போகின்றார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குஷ்னர் குறித்து பேட்டியொன்றில் ட்ரம்ப் பதிலளிக்கையில், “குஷ்ணருக்கு பிராந்தியத்தை நன்றாகத் தெரியும், மக்களைத் தெரியும், ஆட்டக் காரர்களையும் தெரியும்” அதனாலேயே இப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் என்றார். மேலும், “பலஸ்தீன்-இஸ்ரேல் நல்லுறவையும் வளர்க்க குஷ்னர் பாடுபடுவார்’ என்றார்.
குஷ்னர் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவிக்கையில், “a really tough, smart guy. கடினமானவர், மிடுக்கானவர்.” என்றார்.
குஷ்னர் குறித்து மத்திய கிழக்கின் மூத்த தூதர் டெனிஸ் ரோஸ் தெரிவிக்கையில்,
"குஷ்னர் தெளிவாக யூத அடையாளத்தை பிரதிபலிப்பவர்,உண்மையான இஸ்ரேல் பக்தர்"
என்கின்றார்.

No comments:

Post a Comment

Pages