எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் இறுதி அறிக்கை இன்றையதினம் மீண்டும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்ட சாலிய மெதிவ்வும் நேற்றையதினம் கையெழுத்திட்டுள்ளார் என, அக் குழுவின் தலைவர் அஷோக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இக் குழுவில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி எஸ்.மிஸ்பா இறுதி அறிக்கையில் இன்னும் கையெழுத்திடவில்லை. இதற்கமைய, இன்று அவர் தனது இறுதி நிலைப்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக, அஷோக பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் இன்றையதினம் இறுதி அறிக்கையை அமைச்சர் பைசஸ் முஸ்தபாவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கையை வர்த்தமானியில் வௌியிட்டதன் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தமது ஆணைக்குழு தயாராகவுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்

No comments:
Post a Comment