சிரியா தொடர்பான ஐ. நா. தீர்மானம் : சவுதி, கட்டார் பாராட்டு


சிரியாவில் போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொது சபையில் நேற்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
எந்நிலையிலும் போற்குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும், தமது சொந்த இடங்களை விட்டும் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவது நிறுத்தப்பட வேண்டும், மேலும் ஈரான் கிளர்ச்சிப் படைகள் தொடர்ந்தும் சிரியாவில் தங்கி இருக்கக் கூடாது எனவும் குறித்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனது நாட்டு மக்களுக்கு எதிராக பஷ்ஷார் அல் அசத் மேற்கொண்ட அட்டூழியங்களை கண்டிக்கும் விதமாக எந்த தீர்மானமும் பாதுகாப்பு சபையால் நிறைவேற்றுவதை ரஷ்யா தடுத்து வந்த நிலையில், தற்போது ஐக்கிய நாடுகள் பொது சபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ம|ஸ)

No comments:

Post a Comment

Pages