ஜனாதிபதி இனவாதிகளுக்கு அடிபணிந்துவிட்டாரா? அதிர்ச்சியில் வடக்கு முஸ்லிம்கள்!!!!


முஹமட் அஸாம்

வடபுல முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு பாசிச விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது முதல் இன்று வரை சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 25 வருட அகதி வாழ்வோடு சொந்த மண்ணில் குடியேற தவிக்கும் முஸ்லிம் சமூகத்தை இனவாதிகளும் மதவாதிகளும் துரத்திக் கொண்டே இருக்கின்றனர்.
எந்த தப்பும் செய்யாமல் 25 வருட அகதி வாழ்வை கழித்துவிட்டு மௌனமாகவும், கண்ணியமாகவும் பிறந்த மண்ணை நோக்கி புறப்பட்ட சமூகத்தை காணி பிடிக்க வந்தவர்களாகவும், காடழிக்கப் புரப்பட்டவர்களாகவும், சமூகத்துரோகிகளாகவும் சிங்கள இனவாதிகள் காட்ட முற்படுவது ‘வெந்த புண்ணில் வேலேற்றுவது போன்றாகும்’ இதற்கு சில தனியார் தமிழ் ஊடகங்களும் சிங்கள ஊடகங்களும் துணைநிற்பது வேதணையான விடயம்.
2012ம் ஆண்டு வனஜீவராசிகள் திணைக்களம் கொழும்பில் இருந்து இரவோடு இரவாக ஜீ.பி.எஸ் தொழிநுட்பம் மூலம் மன்னார் முசலி மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு கெசட் பண்ணியமை அந்த மக்களுக்கு செய்த மிகப் பெரிய அநியாயமாகும்.
எத்தனையோ முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருந்த போதும் எவரும் சிறிதும் கவனமெடுக்காத இந்த பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலாக அமைச்சர் றிசாட் பதியுதீன் மாத்திரம் அந்த மக்களுக்கு ஆரம்பம் முதல் இன்று வரை குரல் கொடுப்பதுடன் அவர்களுக்குரிய தேவைகளையும் தன்னால் முடியுமானவரை செய்து வருகின்றார்.
இதனை சகிக்க முடியாத இனவாதிகளும் சில துரோகிகளும் அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் பயனளிக்கவி;ல்லை. இதனால் அவர்களுக்கு குரல் கொடுக்கும் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் மாத்திரமே அவரை ஒழித்து விட்டால் நினைத்ததை சாதித்து விடலாம் என இனவாதிகள் இன்று அமைச்சர் றிசாதை அழிக்க கங்கனம் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.
தேர்தல் மேடைகளில் தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் இனவாதிகள் தொடர்பாக வெளியிட்ட கருத்தை நம்பி முஸ்லிம் சமூகம் வாக்களித்து வெற்றியும் பெறச்செய்தனர். ஆனால் ஜனாதிபதி கூறியது போன்று இனவாதிகளை அவர் கட்டுபடுத்துவதை விட்டு அவர்களை அழைத்து பேசுவதும் அவர்களது கோரிக்கைகளை ஏற்று முஸ்லிம் சமூகத்தின் பூர்வீக காணிகளில் கை வைப்பதும் இனவாதிகளுக்கு ஜனாதிபதி அடிபணிந்துவிட்டாரா? என வடக்கு முஸ்லிம்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இனவாத ஊடகங்களும் இனவாதிகளும் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குவதன் பி;ன்னால் யார் செயற்படுவது? வவுனியாவிலே போகஸ்வௌ, நாமல் கம என்ற பிரதேசங்கள் முழுமையாக காடாக இருந்த பிரதேசங்களில் பல்லாயிரம் ஏக்கர் காடுகளை அழித்து புதிய சிங்கள கிரமங்களை உருவாக்கியிருக்கின்றார்கள். இதுதான் உண்மையில் காடுகள் அழிக்கப்பட்டு உருவாக்கபட்ட கிராமங்கள் மாறாக முசலியில் குடியேறிய மக்கள் தங்களது பூர்வீகக் கிராமங்களிலே குடியேறினர்.
இவ்வாறு காடுகள் அழக்கப்பட்ட பிரதேசங்கள் இருக்க முஸ்லிம்களின் சொந்த பூமியில் கை வைப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதற்கு ஜனாதிபதியும் இனவாதிகளின் கருத்துக்கினங்க இன்று செயற்பட்டு வருவது முஸ்லிம்களி;த்தில் நாம் மீண்டும் தவறு செய்து விட்டோமா என எண்ணத்தோன்றுகின்றது.
வடபுல முஸ்லிம்களின் கோரிக்கை சொந்த மண்ணில் நின்மதியாக வாழ வேண்டும் என்பதே. இந்த நாட்டில் இருக்கின்ற ஊடகங்களும் அரசியல் தலைமைகளும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதிக்கப்பட்;ட முஸ்லிம் சமூகத்தின் உரிமையை பெற்றுக்கொடுக்க என்றும் முன்னிற்க வேண்டும்.

ஜனாதிபதியின் இன்றைய மன்னார் காணி தொடர்பான அறிவிப்பு முஸ்லிம் சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதோடு இனவாதிகளை ஒழிக்க கொண்டுவரப்பட்ட நல்லாட்சி இன்று இனவாதத்திற்கு தீனி போடுவது போன்ற செயற்பாடுகளை செய்கின்றாறா? என்ற வினா எழுகின்றது. ஜனாதிபதி முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க அவர் அர்பணிப்புடன் செயற்படுவதோடு இனவாதத்தை இந்த நாட்டில் இருந்து ஒழிப்பேன் என தேர்தல் காலத்தில் அவர் வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டுமென்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடாகும்

No comments:

Post a Comment

Pages