முதல்வர் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்” : குஷ்பு

முதல்வர் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டும்” : குஷ்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
33 நாட்களாக மருத்துவமனையில் உள்ள முதல்வருக்கு, லண்டனைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ரிச்சர்டு பீலே சிகிச்சை அளித்துவந்தார். மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும், சிங்கப்பூர் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல்வரின் உடல்நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிய பல அரசியல் பிரமுகர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு அப்போலோ இன்று மருத்துவமனைக்கு சென்றார்.
முதல்வரின் உடல்நிலையை பற்றி கேட்டறிந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய குஷ்பு, “முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் விரைவில் பூரண குணமடைந்து, வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்“ எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Pages