புத்தளத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகிகள் ஐவருக்கு சிறை!!!!
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணொருவருக்கு 100 சவுக்கடி தண்டனையை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட புத்தளத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகத்தை சேர்ந்த ஐவர் கால எல்லையின்றி விளக்கமறியலில் வைக்க புத்தளம் நீதவான் பந்துல குணரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தங்கியிருந்த நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் இந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில், குறித்த பெண் அப்பிரதேச ஜும்மா பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு, 100 சவுக்கடிகளை வழங்குமாறு பள்ளிவாசல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவு தொடர்பில் குறித்த பெண் தனது சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பொலிஸார் புத்தளம் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவூட்டியதை தொடர்ந்து, குறித்த ஜும்மா பள்ளிவாசலை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

No comments:
Post a Comment