ஜிம்னாஸ்டிக் போட்டியில் கால் முறிந்த பரிதாபம்: பிரான்ஸ் வீரர் வெளியேற்றம்




ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரர் சமீர் எயிட்-இன் காலில் முறிவு ஏற்பட்டமையால், பரிதாபமாக போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார்.


ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ் அணி சார்பில் சமிர் எய்ட் கலந்து கொண்டிருந்தார். இதன்போது சாகசங்களை புரிந்த சமீர், கடைசியாக டைவிங் செய்து தரையில் நிற்கும்போது அவரது இடது கால் சரியாக தரையில் பதியாமல் நிலைதடுமாறியுள்ளார்.

இதில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவக்குழுவினர் விரைந்து அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சமிர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம் வென்றவராவார். அத்துடன் இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு தொடரிலும் இதுபோன்று காயத்திற்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

athavansports

No comments:

Post a Comment

Pages