அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு கடன் வழங்க ஜப்பான் இணக்கம்!!!

அரசாங்க நிதிநிலைமையை ஸ்திரமாக பேணுதல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக 46622 மில்லியன் ரூபா கடனுதவியை வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளது.
எதிர்வரும் ஐந்தாண்டுகளுக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஸ்திரமான நிதிநிலைமையைக் கட்டியெழுப்புவதற்கு இந்த கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதவிர அனுராதபுரம் – வடக்கு நீர்ப்பாசனத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் ஜைக்கா என்ற ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனம் 32169 மில்லியன் ரூபா கடனுதவியை வழங்கியுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்தில் நிலவியுள்ள சிறுநீரக நோய்க்கு தீர்வாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இந்த கடன்களுக்கான பத்திரங்கள் மற்றும் அபிவிருத்திக்கான கொள்கை ரீதியான கடன் திட்டங்களுக்குரிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நிகழ்வு நிதியமைச்சில் இன்று இடம்பெற்றது.
இலங்கையின் சார்பாக திறைசேரியின் பிரதி செயலாளரும், ஜப்பான் சார்பாக இலங்கைக்கான அந்த நாட்டு தூதுவரும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்

No comments:

Post a Comment

Pages