ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அப்துல்லாஹ் ஹஸரத்அவர்களின் ஜனாஸா இன்றுவியாழக்கிழமை(13.10.2016) மாலைகாத்தான்குடியில் நல்லடக்கம்செய்யப்பட்டது.
நேற்று 12 ஆம் திகதி புதன்கிழமைமாலை வபாத்தான காத்தான்குடிஜாமியத்துல் பலாஹ்அறபுக்கல்லூரியின் அதிபரும்இஸ்லாமிய சன்மார்க்க அறிஞருமானகாத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ்அறபுக்கல்லூரியின் அதிபர்அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத்அவர்களின் ஸனாஸா தொழுகைவியாழக்கிழமை மாலை காத்தான்குடிஐந்தாம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன்ஜும்ஆப்பள்ளிவாயலில் நடைபெற்றது.
தொழுகைக்கு முன்னதாக அகிலஇலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபையின் தலைவர் மௌலவி றிஸ்விமுப்தி மற்றும் அமைச்சரும் சிறிலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைவருமானரவூப் ஹக்கீம் இராஜாங்க அமைச்சர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்படஉலமாக்கள் உரையாற்றினர்.
ஜனாஸா தொழுகையிலும்நல்லடக்கத்திலும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் அமைச்சர் றிசாட் பதியுதீன்இராஜாங்க அமைச்சர்எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும்பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிகிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ்நசீர் அகமட் முன்னாள் அமைச்சர்ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் கிழக்குமாகாண சபை உறுப்பினர்பொறியியலாளர் சிப்லி பாறூக் அகிலஇலங்கை ஜம் இய்யத்துல் உலமாசபையின் தலைவர் மௌலவி றிஸ்விமுப்தி உட்பட நாட்டின் பலபாகங்களிலுமுள்ளஅறபுக்கல்லூரிகளின் அதிபர்கள்உலமாக்கள் முக்கியஸ்தர்கள் எனஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பள்ளிவாயல் நிரம்பி பள்ளிவாயலின்வெளியே மற்றும் பள்ளிவாயல்வெளியே உள்ள வீதிகளிலும் பொதுமக்கள் நின்று ஜனாஸா தொழுகையில்கலந்து கொண்டனர்.
ஜனாஸா தொழுகையை அப்துல்லாஹ்ஹஸரத் அவர்களின் மகன் மௌலவிபறக்கத்துல்லாஹ் பலாஹி நடாத்தமௌலவி ஏ.ஜி.எம்.அமீன் பலாஹிதுஆப்பிராத்தனையை நடாத்தினார்.
இதையடுத்து அப்துல்லாஹ் ஹஸரத்அவர்களின் ஜனாஸா பெருந்திரளானமக்கள் புடை சூழ காத்தான்குடிஜாமியுழ்ழாபிரீன் மைய்யவாடிக்குகொண்டு செல்லப்பட்டுஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்மல்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment