மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் கோப் குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப் அறிக்கை நாளை(28) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கோப் குழுவின் உறுப்பினரான பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த போதிலும், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக அது முடியாமல் போனதால் இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கோப் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கோப் குழுவின் கூட்டம் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்றதாகவும் அனைத்த உறுப்பினர்களும் விசாரணைகளின் இறுதி அறிக்கை தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment